How to create CATCH GAME in Scratch Programming | Tamil

ஐசக் நியூட்டன் ஆப்பிள் மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு இருக்கும் பொழுது திடீரென மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதை கண்டார். அதைக் கண்டவுடன் நியூட்டனுக்கு ஒரு கேள்வி எழுந்தது? அது ஏன் தரையில் விழுகிறது என்று யோசித்தபோது புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார். புவியீர்ப்பு விசையின் அடிப்படையில் வானத்திலிருந்து விழும் பொருட்களை பிடிக்கும் ஒரு விளையாட்டை உருவாக்குவோம். How to create CATCH GAME in Scratch Programming in Tamil.

Introduction:

Catch game விளையாட்டு என்பது குழந்தைகளின் பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சியாகவும், கற்பித்தல் நோக்கத்திற்காகவும் உருவாக்கப்படும் செயலாகும். விளையாடுவதால் குழந்தைகள் தமது கவலைகளை மறந்து இன்பமாக இருக்கின்றனர்.இப்பொழுது catch game விளையாடுவதை பற்றி  காணலாம். 

ஆப்பிள் மேல் நோக்கி செல்லும் முறையை உருவாக்குதல்:

[Boardwalk] என்ற backdrop-தேர்ந்தெடுத்து பின்னர் ஆப்பிள் sprite -ஐ தேர்ந்தெடுக்கவும். ஆப்பிளுக்கு என்று ஒரு தனி குறியீட்டை உருவாக்க வேண்டும். முதலில் [when green flag clicked] என்ற  குறியீட்டை தேர்வு செய்யவேண்டும் பின்னர் [go to random position]-ஐ [when green flag clicked] குறியீட்டுடன் சேர்க்கவேண்டும். இதனுடன் set y to 180-y axis-இல் 180 என்ற எண்ணுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும் .green flag-ஐ கிளிக் செய்து ஆப்பிள் மேல்நோக்கி செல்லும் முறையைக் காணலாம்.

ஆப்பிள் கீழ் செல்லும் நிலையை உருவாக்குதல்:

முந்தைய குறியீட்டை ஆப்பிளுக்கு வைத்துக் கொண்டு அதனுடன் Forever என்ற குறியீட்டுடன் change y by -5 சேர்க்க வேண்டும்.பின்னர் if —thenஎன்ற குறியீட்டை சேர்க்க வேண்டும். Operators வகையிலிருந்து  [y-position <-170] என்ற குறியீட்டை சேர்க்கவும்.இப்பொழுது green flag-ஐ கிளிக் செய்து ஆப்பிள் கீழே விழுவதைக் காணலாம்.

Bowl- ஐ  நகர்த்தும் செயல்முறை:

Bowl-தேர்ந்தெடுக்கவும். பின்னர் bowl stage-ன் கீழ்நிலையில் வைத்துக் கொள்ளவும்.bowl- க்கு என்ற ஒரு குறியீட்டை உருவாக்க வேண்டும். [when green flag clicked] என்ற குறியீட்டை சேர்த்து அதனுடன் forever, if—then என்ற குறியீட்டை சேர்க்கவும். இதனுடன் [key right arrow pressed?] ,change x by 10 என்ற குறியீட்டை சேர்க்கவும். மீண்டும் if —-then என்ற குறியீட்டில்  key left arrow pressed?-ஐ சேர்க்கவும். பின்னர் change x by -10-ஐ சேர்க்க வேண்டும். அதன் பிறகு green flag-ஐ கிளிக் செய்து bowl நகர்வதை காணலாம்.   

ஆப்பிளை பிடிக்கும் முறை:

ஆப்பிளுக்கு என்று மீண்டும் ஒரு குறியீட்டை உருவாக்க வேண்டும். When green flag clicked,Foreverஎன்ற குறியீட்டை  சேர்த்து அதனுடன் if—then சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் touching bowl, play sound pop until done, go to random position, set y to 180 என்ற குறியீட்டை சேர்க்க வேண்டும்.Green flag-ஐ கிளிக் செய்யும்போது ஆப்பிள் மேலிருந்து bowl-ல் விழும்போது pop என்று sound எழுகின்றதையும்,bowlஆப்பிளை பிடிக்கும் முறையையும் காணலாம்.

Score-ஐ உருவாக்கும் முறை :

Make a variable என்ற வகையை தேர்ந்தெடுத்து அதில் score என்று எழுத வேண்டும். பின்னர் ஆப்பிளை பிடிக்கும் முறைக்கு உருவாக்கிய குறியீட்டுடன் set score to:0 மற்றும் change score by 1 என்ற block-ஐ சேர்க்க வேண்டும்.Green flag- ஐ கிளிக் செய்தவுடன் ஆப்பிள் bowl-ல் விழுந்தவுடன் score அதிகரிப்பதை காணலாம்.

Bonus points:

Duplicate ஆப்பிளை- ஐ தேர்ந்தெடுக்கவும். பின்னர் அதற்கென்று ஒரு நிறத்தை மாற்றிக் கொண்டு original ஆப்பிளுக்கு என்று உருவாக்கிய குறியீட்டுடன் change score by 1( duplicate) ஆப்பிளுக்கு என்று ஒரு குறியீட்டை சேர்க்கவும்.Green flag-ஐகிளிக் செய்து ஆப்பிள் bowl-ல் விழுவதையும் ( duplicate) ஆப்பிள் bowl-ல் விழும்போது Bonus score அதிகரிப்பதை காணலாம்.

Conclusion:

Catch game-இதுபோன்ற பல விளையாட்டுக்களை உருவாக்கி விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கலாம். இதனால் அவர்களின் உடலும் மனமும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.