How to create JUMPING GAME in scratch programming | Tamil

Which Was First?

 கோழியிலிருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. பழங்காலத்திலிருந்து விஞ்ஞானிகளை  குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது  இந்த கேள்வி. ஆனால் இதுவரைக்கும் பதில் யாருக்கும்  சரியாக கிடைக்கவில்லை. அதுபோல நாம் கோழியும் (chick) முட்டையும் (Egg)  வைத்து ஒரு விளையாட்டை உருவாக்குவோம். How to create JUMPING GAME in scratch programming in Tamil.

Introduction:

Jumping game-ல் இடது மற்றும் வலது புறமாக (sprite) செல்லுமாறு இந்த விளையாட்டு அமைக்கப்படுகிறது.sprite-ஐ குதிக்க வைப்பதற்கு up மற்றும் down arrow, space போன்ற keys-களைப் பயன்படுத்தி இந்த விளையாட்டு உருவாக்கப்படுகிறது.

Chick-ஐ குதிக்க வைக்கும் முறையை உருவாக்குதல்:

Blue sky  என்ற backdrop- ஐ தேர்ந்தெடுத்து chick என்ற sprite-ஐ தேர்ந்தெடுக்கவும்.chick-க்கு என்று தனி குறியீட்டை உருவாக்க வேண்டும். முதலில் when space key pressed? தேர்ந்தெடுத்து repeat 10 அதனுடன் change y by-10 என்ற குறியீட்டை சேர்க்கவேண்டும். இதனுடன் repeat 10,change y by-10சேர்த்து பின்னர் keyboard-ல் space-ஐ  press செய்யும்போது chick குதிப்பதை காணலாம்.

Chick- ஐ  தொடக்க நிலையில் அமைக்கும் முறை:

Chick-ற்கு ஒரு குறியீட்டை உருவாக்க வேண்டும்.when green flag clicked ,go to x:-180,y:-120 என்ற இரண்டு குறியீட்டை சேர்க்கவும். பிறகுGreen flag- ஐ கிளிக் செய்து chick  நகர்வதை காணலாம்.

Egg- நகரும் முறையை உருவாக்குதல்:

ஒரு Egg-ஐ  தேர்ந்தெடுத்து [sprite]  அதற்கென்று ஒரு தனி குறியீட்டை உருவாக்க வேண்டும். When green flag clicked, Forever என்ற குறியீட்டை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் go to x:240,y:-145, Glide 3 secs to x:-240,y:-145என்ற குறியீட்டை சேர்க்க வேண்டும்.Green flag-கிளிக் செய்யும் போது Egg நகர்வதை காணலாம்.

Chick-க்கு உருவாக்கிய முந்தைய குறியீட்டில் start sound chirp என்ற குறியீட்டை சேர்ப்பதன் மூலம் chick  சத்தமிடுவதைக் காணலாம்.

விளையாட்டின் முடிவு நிலை:

Egg-க்கு மீண்டும் ஒரு குறியீட்டை உருவாக்க வேண்டும். When green flag clicked, switch costume to egg-a மற்றும் wait until என்ற குறியீட்டை சேர்க்க வேண்டும். switch costume to egg-b மற்றும் stop all என்ற இரண்டு குறியீட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.Green flag-ஐ click செய்யும் போது chick, egg-ஐ தொட்டவுடன் Game முடிவு நிலைக்கு வருகிறது.

இரண்டாவது  [duplicate] Egg- நகரும் முறையை உருவாக்குதல்:

முந்தைய முட்டைக்கு என்று உருவாக்கிய குறியீட்டுடன் இரண்டாவது முட்டைக்கு hide, wait 1 seconds, show என்ற குறியீட்டை சேர்க்க வேண்டும். Green flag கிளிக் செய்தவுடன் அதிக முட்டைகள் வருவதை காணலாம்.

Score- ஐ உருவாக்கும் முறை:

Make a variable என்ற வகையை தேர்ந்தெடுத்து அதில் score என்று எழுத வேண்டும். ஏற்கனவே உருவாக்கிய குறியீட்டுடன் set score to 0  என்ற குறியீட்டை சேர்க்க வேண்டும். பின்னர் change score by 1 என்ற குறியீடு சேர்க்க வேண்டும். Green flag  கிளிக் செய்தவுடன் chick  jump செய்வதையும் முட்டை நகர்வதும் score  அதிகரிப்பதையும் காணலாம்.

Conclusion:

இதுபோன்ற  Jumping game  உருவாக்குவதன் மூலம் குழந்தைகளின் விளையாட்டின் ஆர்வத்தை தூண்டலாம்.  இதுபோன்ற குழந்தைகள் தாமாக விளையாட்டுகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் அறிவையும் திறமையையும் வளர்க்கலாம்.